கம்பஹா மாவட்டத்தில் தொற்றாளர்கள் உயர்வு!
கம்பஹா மாவட்டத்தில் நேற்று மட்டும் 865 கொரோனாத் தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் தெரிவித்துள்ளது.
மாவட்டத்தில் 15 சுகாதார பிரிவுகளிலேயே தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர்.
இதற்கமைவாக மீரிகம பிரிவில் 100 தொற்றாளர்களும், பியகம பிரிவில் 98 தொற்றாளர்களும், களனிப் பிரிவில் 87 தொற்றாளர்களும், வத்தளைப் பிரிவில் 82 தொற்றாளர்களும், ஜா – எல பிரிவில் 79 தொற்றாளர்களும், மஹர பிரிவில் 71 தொற்றாளர்களும், சீதுவ பிரிவில் 62 தொற்றாளர்களும், தொம்பே பிரிவில் 60 தொற்றாளர்களும், கம்பஹா பிரிவில் 54 தொற்றாளர்களும், திவுலப்பிட்டிய பிரிவில் 51 தொற்றாளர்களும், அத்தனகல்ல பிரிவில் 45 தொற்றாளர்களும், ராகம பிரிவில் 30 தொற்றாளர்களும், நீர்கொழும்பு பிரிவில் 15 தொற்றாளர்களும், மினுவாங்கொடைப் பிரிவில் 5 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
குறித்த மாவட்டத்தில் ஆடைத்தொழிற்சாலை கொத்தணி தொற்றாளர்கள் 30 பேர் இனங்காணப்பட்டுள்ளனர்.
392 தொற்றாளர்கள் தனிமைப்படுத்தல் சிகிச்சை நிலையங்களிலும், 114 பேர் வைத்தியசாலைகளிலும் சேர்க்கப்பட்டுள்ளனர்.