மீன் மார்க்கெட்டுக்கு படையெடுக்கும் மக்கள் – காற்றில் பறந்த சமூகஇடைவெளி
திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் அதிகாலையிலேயே குவிந்த கூட்டம் காற்றில் பறக்க விடப்பட்ட சமூக இடைவெளிகள் மேலும் தொற்று பரவும் அபாயம்.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் தொற்று படிப்படியாக குறைந்து வரும் நிலையில் தமிழக அரசு பொதுமக்களின் நலன் கருதி சில தளர்வுகளுடன் கூடிய ஊரடங்கு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் தமிழகத்தில் கொரோனா தொற்று முழுவதும் கட்டுப்படுத்தும் விதமாக மக்கள் அதிகம் கூடும் இடமான திரையரங்குகள் மால்கள் இன்னும் திறக்கப்படாத சூழ்நிலை உள்ளது.
தமிழகத்தில் கொரோனா இரண்டாம் தொற்று படிப்படியாக குறைந்து வந்தாலும் சில மாவட்டங்களில் அதிகரித்து வருவதால் சென்னை உள்ளிட்ட பல மாவட்டங்களில் விதிமுறைகள் கடுமையாக்கப்பட்டுள்ளது. கூட்டம் அதிகம் கூடும் இடங்களுக்கு தடைகளும் விதிக்கப்பட்டு உள்ளது.
திண்டுக்கல் மீன் மார்க்கெட்டில் கூட்டங்களை கட்டுப்படுத்த வேண்டும் என்று மாவட்ட நிர்வாகம் தினசரி 6 மணி முதல் 9 மணி வரையும் அதிகாலை 3 மணி முதல் 5 மணி வரையும் செயல்பட உத்தரவு பிறப்பித்து உள்ளது. இருப்பினும் ஞாயிற்றுக்கிழமை என்பதால் மீன் மார்க்கெட்டில் மீன்கள் வாங்குவதற்கு பொதுமக்கள் மற்றும் வியாபாரிகள் ஆயிரத்திற்கும் மேற்பட்டோர் குவிந்தனர்.
மீன் மார்க்கெட்டில் கிரிமி நாசினிகளோ சமூக இடைவெளியை முகக் கவசங்கள் இன்றி கூட்டம் அதிக அளவில் காணப்பட்டதால் குறைந்து வரும் கொரோனா தொற்று மேலும் பரவும் வண்ணம் இருந்ததால் பொதுமக்கள் அதிகம் கூடும் இடங்களை சுகாதார துறை அதிகாரிகள் கவனத்தில் கொண்டு மேலும் தொற்று பரவா வண்ணம் நடவடிக்கைகள் எடுக்க வேண்டும் என்பது சமூக ஆர்வலர்களின் கோரிக்கையாக உள்ளது.