மாகாணங்களுக்கு இடையில் இன்று முதல் பொது போக்குவரத்து.

மாகாணங்களுக்கு இடையிலான பொது போக்குவரத்து சேவை இன்று முதல் மீண்டும் ஆரம்பிக்கப்படவுள்ளதாக போக்குவரத்து இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.
அதன்படி , பஸ் மற்றும் ரயில் சேவைகள் சுகாதார நடைமுறைகளை பின்பற்றி, மாகாணங்களுக்கு இன்று முதல் ஆரம்பிக்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிடுகின்றார்.
ஆசனங்களின் எண்ணிக்கைக்கு ஏற்ப, பயணிகளை அழைத்து செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளதாக இராஜாங்க அமைச்சர் கூறுகின்றார்.
இதன்படி ,எதிர்வரும் 2ம் திகதி முதல் அரச ஊழியர்களை வழமை போன்று பணிக்கு சமூகமளிக்குமாறு அரசாங்கம் அறிவித்துள்ளது.
அரச ஊழியர்களுக்கு பணிக்கு செல்லும் வகை, காலை மற்றும் மாலை வேளைகளில் பொது போக்குவரத்துக்களை மாகாணங்களுக்கு இடையில் ஆரம்பிக்க எதிர்பார்த்துள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
எனினும், இடைப்பட்ட காலப் பகுதியில் மாகாணங்களுக்கு இடையிலான போக்குவரத்து தற்போதைய சூழ்நிலையில் ஆரம்பிக்கப்படாது எனவும் அவர் கூறியுள்ளார்.
மேலும் ,கொவிட் வைரஸ் பரவல் நிலைமை காணப்படுகின்றமையினால், சுகாதார அமைச்சின் பரிந்துரைகளுக்கு அமைய இந்த பொது போக்குவரத்து சேவைகள் ஆரம்பிக்கப்படவுள்ளதாக இராஜாங்க அமைச்சர் திலும் அமுனுகம தெரிவிக்கின்றார்.