இன்று முதல்,தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி போடப்படும்.

குவைத் இன்று முதல் தினமும் ஒரு லட்சம் பேருக்கு தடுப்பூசி வழங்கப்படும். இதற்காக மேலும் கூடுதல் மையங்கள் திறக்கப்படும் என்று சுகாதார அமைச்சகம் தெரிவித்துள்ளது.
குவைத்திற்கு இறக்குமதி செய்யப்படும் தடுப்பூசிகள் வருகை அதிகரித்துள்ள நிலையில் இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாக தெரிகிறது. ஆகஸ்ட் இறுதிக்குள் நாட்டில் இதுவரையில் பதிவு செய்த அனைவருக்கும் தடுப்பூசி வழங்கப்படும் என்று நம்பப்படுகிறது.
நாட்டில் 20 லட்சம் பேருக்கு நேற்றைய தினம் வரையிலான கணக்குகளின்படி தடுப்பூசிகள் போடப்பட்டுள்ளது.