நயினாமடுவில் துப்பாக்கியுடன் ஒருவர் கைது!

வவுனியா மாவட்டம், புளியங்குளம் பொலிஸ் பிரிவுக்குட்பட்ட நயினாமடு பிரதேசத்தில் மேற்கொள்ளப்பட்ட விசேட சுற்றிவளைப்பில் உள்நாட்டுத் துப்பாக்கியுடன் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
புளியங்குளம் பிரதேசத்தைச் சேர்ந்த 22 வயதுடைய நபரே இவ்வாறு கைதுசெய்யப்பட்டுள்ளார் என்று பொலிஸ் ஊடகப் பிரிவு இன்று தெரிவித்துள்ளது.
குறித்த நபரை நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தவதற்கு பொலிஸார் நடவடிக்கை எடுத்துள்ளனர்.