பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி தங்கநகை திருடிய பெண் சிக்கினார்.

பேஸ்புக்கினூடாக நட்பை ஏற்படுத்தி தங்கநகை திருட்டில் ஈடுபட்ட 24 வயது பெண்ணொருவரைப் பொலிஸார் கைதுசெய்துள்ளனர் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண தெரிவித்துள்ளார்.
முகத்தளப்புத்தகத்தினூடாக சீதுவ பிரதேசத்தைச் சேர்ந்த 23 வயது யுவதியுடன் நட்பை ஏற்படுத்திக்கொண்ட சந்தேகநபர், அந்த யுவதியின் வீட்டுக்கு இரண்டு தடவைகள் சென்றுள்ளதுடன் இரண்டு தடவைகளுயும் யுவதியின் வீட்டிலிருந்த தங்கநகைகளைத் திருடியுள்ளார் என்று தெரியவந்துள்ளது.
கொட்டுகொட பிரதேசத்திலுள்ள வீடொன்றிலேயே இந்தக் கொள்ளைச் சம்பவம் இடம்பெற்றுள்ளது.
இறுதியாக நேற்றுமுன்தினம் யுவதியின் வீட்டுக்குச் சென்ற சந்தேகநபர், சுமார் மூன்றரைப் பவுன் தங்கநகைகளைத் திருடியுள்ளார் என விசாரணையில் தெரியவந்துள்ளது என்றும் பொலிஸ் ஊடகப் பேச்சாளர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.