பிறப்பு, திருமணம், இறப்பு சான்றிதழ்களின் பிரதிகளைப் பெற்றுக்கொள்ள இணைய வழி அறிமுகம்!

பிறப்பு, திருமணம் அல்லது மரணச் சான்றிதழ்களின் பிரதிகளை இன்று முதல் இணையத்தின் மூலம் பெற்றுக்கொள்ள முடியும் எனப் பதிவாளர் திணைக்களம் அறிவித்துள்ளது.
பிரதிகளைப் பெற்றுக்கொள்வதற்கான விண்ணப்பப்படிவங்களைக் கைத்தொலைபேசி அல்லது கணினி ஊடாக பூர்த்தி செய்ய முடிவதுடன், இதற்கான கட்டணங்களையும் இத்திரனியல் அட்டைகள் மூலம் செலுத்த முடியும் எனவும் திணைக்களம் அறிவித்துள்ளது.
இவ்வாறு விண்ணப்பிக்கப்படும் சான்றிதழ்களின் பிரதிகளை, தபால் மூலமாகவோ அருகில் உள்ள பிரதேச செயலாளர் பிரிவிலோ பெற்றுக்கொள்ள முடியும் எனவும் பதிவாளர் திணைக்களம் தெரிவித்துள்ளது.
இதற்கான கோரிக்கைகளை https://online.ebmd.rgd.gov.lk/ என்ற இணையத்தளம் ஊடாக விண்ணப்பிக்க முடிவதுடன், மேலதிக தகவல்களை www.rgd.gov.lk இணையத்தளம் ஊடாகவும், 011 2889518 என்ற தொலைபேசி எண் மூலமும் பெற்றுக்கொள்ள முடியும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.