ஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் 90 லட்சம் ரூபா பணத்துடன் கைது!

பண்டாரகம – கொத்தலாவல பிரதேசத்தில் ஐஸ் போதைப்பொருள் வர்த்தகர் ஒருவர் கைதுசெய்யப்பட்டுள்ளார்.
39 வயதான குறித்த நபர் கைதான வேளை அவரிடமிருந்து 100 கிராம் ஐஸ் போதைப்பொருள் மீட்கப்பட்டுள்ளது எனப் பொலிஸ் ஊடகப் பிரிவு தெரிவித்துள்ளது.
அதேவேளை, அவரிடமிருந்து ஐஸ் போதைப்பொருள் வர்த்தகத்தில் ஈட்டியதாகக் கருதப்படும் 90 லட்சம் ரூபா பணமும் கைப்பற்றப்பட்டுள்ளது எனவும் பொலிஸ் ஊடகப் பிரிவு மேலும் குறிப்பிட்டுள்ளது.