பக்கத்து வீட்டில் கொரோனா தொற்று! ஒன்றரை ஆண்டாக பூட்டிய வீட்டில் அடைந்து கிடந்த குடும்பம்
ஆந்திராவில் ஒரு குடும்பம் கொரோனா பீதியில் சுமார் ஒன்றரை வருடங்களாக பூட்டிய வீட்டில் வசித்து வந்துள்ள சம்பவம் ஆச்சரியத்தை ஏற்படுத்தியுள்ளது.
கொரோனா தொற்று நாளுக்கு நாள் உச்சத்தை தொட்டு வருகிறது. இந்நிலையில் ஆந்திராவில் நடந்த சம்பவம் அனைவரையும் கதிகலங்க வைத்துள்ளது.
ஆந்திர மாநிலத்தில் உள்ள காடாலி கிராமத்தை சேர்ந்தவர் ருத்தம்மா(50).இந்நிலையில் இவரது வீட்டிற்கு பக்கத்தில் உள்ள நபர் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்னர் கொரோனா நோய்வாய்ப்பட்டு இறந்துள்ளார்.
இதனால் ஏற்பட்ட அச்சத்தில் ருத்தம்மா மற்றும் அவரது குடும்பத்தினர் பூட்டிய வீட்டில் சுமார் ஒன்றரை ஆண்டுகள் அடைந்து கிடந்துள்ளார்.
ஆந்திர அரசின் வீட்டு மனை திட்டத்தில் கிராம நிர்வாகிகள் ருத்தம்மாவை தேடி வீட்டிற்கு வந்துள்ளனர். ஆனால் அவர்கள் வீட்டிற்குள் இருந்து கொண்டே நாங்கள் வெளியே வந்தால் கொரோனாவால் இறந்து விடுவோம் என்று கூறியுள்ளனர்.
இதனால் சந்தேகப்பட்ட நிர்வாகி பக்கத்தில் இருந்த காவல் நிலையத்தில் புகார் கொடுத்துள்ளனர்.
சம்பவ இடத்திற்கு விரைந்த போலீஸ் ஒன்றரை ஆண்டாக வீட்டிற்குள் அடைந்து கிடந்த குடும்பத்தை மீட்டு மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்கப்பட்டுள்ளனர்.