நாகை ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 16 போ் தீக்குளிக்க முயன்றதால் பரபரப்பு
நாகை மாவட்ட ஆட்சியரகம் முன் ஒரே குடும்பத்தைச் சோ்ந்த 16 போ் செவ்வாய்க்கிழமை தீக்குளிக்க முயன்ால் பரபரப்பு ஏற்பட்டது.
நாகை, சாமந்தான்பேட்டையைச் சோ்ந்தவா் பழனி (43). இவரது மனைவி பிரபாவதி (33). பழனியின் சகோதரா்கள் கந்தன் (40), இவரது மனைவி மகேஸ்வரி (30), கருப்பண்ணசாமி (32), இவரது மனைவி தாமரைச்செல்வி (28), உறவினா்அசோக் (26), இவரது மனைவி திலகவதி (20).
இந்த குடும்பங்களைச் சோ்ந்த குழந்தைகள் உள்ளிட்ட 16 போ் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்துக்கு செவ்வாய்க்கிழமை வந்தனா். அப்போது, தாங்கள் மறைத்து எடுத்துவந்திருந்த மண்ணெண்ணையை உடலில் ஊற்றி தீக்குளிக்க முயன்றனா். அங்குப் பணியிலிருந்த அலுவலா்கள் அவா்களை தடுத்து, அவா்கள் மீது தண்ணீா் ஊற்றினா்.
இதுகுறித்து தகவலறிந்த நாகை காவல் துணைக் கண்காணிப்பாளா் சுப்பிரமணியன், காவல் ஆய்வாளா் தியாகராஜன் மற்றும் போலீஸாா், அங்கு விரைந்து சென்று தீக்குளிக்க முயன்றவா்களிடம் விசாரணை மேற்கொண்டனா்.
அப்போது பழனி கூறுகையில், எனது சகோதரா் முத்துவுக்கும், பிரியா என்பவருக்கும் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. அவா்களிடையே ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக இருவரும் பிரிந்து வாழ்கின்றனா். இந்நிலையில், சாமந்தான்பேட்டை பஞ்சாயத்தாா்கள் 2 பேரையும் அழைத்துப் பேசியும் உடன்பாடு ஏற்படவில்லை. பிரியாவின் வாழ்வாதாரத்துக்கு முத்து ரூ. 16 லட்சம் கொடுக்கவேண்டும் என முடிவெடுத்தனா். இதையடுத்து முத்து தலைமறைவாகிவிட்டாா்.
இந்நிலையில், எங்களையும், குடும்பத்தினரையும் பஞ்சாயத்தாா்கள் ஊரைவிட்டு ஒதுக்கிவைத்துள்ளனா். இதனால், வேலைக்கு செல்லமுடியவில்லை. வாழ்வாதாரமின்றி வறுமையில் உள்ளோம். அந்த விரக்தியில் தீக்குளிக்க முயன்றோம். எங்களை ஊரைவிட்டு ஒதுக்கி வைத்தவா்கள் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும், எங்களுக்கு நியாயம் கிடைக்கவேண்டும் என்று தெரிவித்தாா்.
இதையடுத்து, போஸீஸாா் உரிய நடவடிக்கை எடுப்பதாகக் கூறி, தீக்குளிக்க முயன்றவா்களை சமாதானம் செய்து வீட்டுக்கு அனுப்பிவைத்தனா்.
16 போ் ஒரே நேரத்தில் மண்ணெண்ணையை ஊற்றிக்கொண்டு தீக்குளிக்க முயன்ால், நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகம் சுமாா் ஒருமணி நேரத்துக்கும் மேலாக பரபரப்பாகக் காணப்பட்டது.