பேரனர்ததம்! 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து தலைகீழாக சென்ற சர்வதேச விண்வெளி நிலையம்
சர்வதேச விண்வெளி நிலையத்தில் ஏற்பட்ட திடீர் விபத்து காரணமாக சர்வதேச விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து விட்டதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
சர்வதேச விண்வெளி நிலையத்திற்கு ரஷ்யாவின் நௌகா (Nauka) கலன் ஓன்று புதியதாக அனுப்பப்பட்டது.
ரஷ்யாவின் நௌகா (Nauka) கலன் ஐ.எஸ்.எஸ் உடன் இணைக்கப்பட்ட சில மணி நேரத்தில் எதிர்பாராத விதமாக ஏற்பட்ட விபத்து காரணமாக திடீர் கோளாறு ஏற்பட்டது.
இந்த விபத்தால் சர்வதேச விண்வெளி நிலையம் நிலைநிறுத்தப்பட்டிருந்த இடத்தில் இருந்து 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா முதற்கட்டமாக தெரிவித்தது.
இந்த விபத்து ஏற்பட்டவுடன் விண்வெளி நிலைய வீரர்களுடனான தொடர்பு துண்டிக்கப்பட்டதாகவும், மீட்பு நடவடிக்கைகளுக்கு பின்னர் சர்வதேச விண்வெளி நிலையம் நன்றாக இயங்குவதாகவும் நாசா கூறியுள்ளது.
ஆனாலும் முன்பு அறிவித்ததை விட சர்வதேச விண்வெளி நிலையத்தில் நிலைமை மிகவும் மோசமாக இருப்பதாக கூறப்படுகிறது.
சர்வதேச விண்வெளி நிலையம் 45 டிகிரி கோணத்தில் நகர்ந்தது என்று நாசா கூறினாலும், சர்வதேச விண்வெளி நிலையம் அதன் அசல் நிலைக்கு ஒப்பிடும்போது சுமார் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்து தலைகீழாக மாறி விட்டது என்று தகவல்கள் கூறுகின்றன.
ஹூஸ்டனில் உள்ள நாசாவின் மிஷன் கண்ட்ரோல் சென்டரில் பொறுப்பேற்றுள்ள விமான இயக்குனர் ஜெபுலன் ஸ்கோவில், இந்த சம்பவம் சரியாக தெரிவிக்கப்படவில்லை.
விண்வெளி நிலையம் 540 டிகிரி கோணத்தில் நகர்ந்த பிறகு பழைய நிலைக்கு கொண்டு வரப்படுவதாக தெரிவித்தார்
சர்வதேச விண்வெளி நிலையம் அவசரநிலையை அறிவித்ததால், தலைகீழாக மாறிய பிறகு, நிலையத்துடன் தொடர்பு கொள்ள நாசா மற்ற கூடுதல் ஆண்டெனாக்களைச் செயல்படுத்த வேண்டியிருந்தது.
இந்த விபத்து காரணமாக விண்வெளி நிலையம் சுற்றுப்பாதையில் இருந்து வெளியேறி விட்டதகவும், ரஷ்யாவின் நௌகா கலன் விண்வெளி நிலையத்தின் அடிப்பகுதியில் நிறுத்தப்பட்டுள்ளதாகவும் கூறப்படுகிறது.