ஆஸ்திரேலியா அணிக்கு எதிரான 2-வது டி20 போட்டியிலும் 5 விக்கெட் வித்தியாசத்தில் வங்காளதேசம் வெற்றி.
ஆஸ்திரேலியா வங்காளதேசம் அணிக்களுக்கு இடையேயான 2-வது டி20 போட்டி நடைபெற்றது. டாஸ் வென்ற ஆஸ்திரேலியா அணி பேட்டிங் தேர்வு செய்தது. நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவரில் ஆஸ்திரேலியா அணி 7 விக்கெட்டுகளை இழந்து 121 ரன்கள் மட்டுமே எடுத்தது. அதிகபட்சமாக மிட்செல் மார்ஸ் 45 ரன்கள் எடுத்தார்.
வங்காளதேசம் அணி தரப்பில் முஸ்தபிசுர் ரஹ்மான் 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார். இதனையடுத்து 122 ரன்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய வங்காளதேசம் அணி 18.4 ஓவரில் 123 ரன்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் அசத்தல் வெற்றி பெற்றது. ஏற்கனவே முதல் டி20 போட்டியில் 23 ரன்கள் வித்தியாசத்தில் வங்காளதேசம் அணி வெற்றி பெற்றது.
5 போட்டிகள் கொண்ட டி20 தொடரில் வங்காளதேசம் அணி 2-0 என்ற கணக்கில் முன்னிலை வகிக்கிறது. இவ்விரு அணிக்களுக்கு இடையேயான 3-வது டி20 போட்டி 6-ம் தேதி நடக்கிறது