தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு.

அமைச்சரவைத் தீர்மானத்திற்கு இணங்க திரு . டங்கன் வைட் அவர்கள் ஒலிம்பிக் போட்டிகளின் போது வெள்ளிப் பதக்கமொன்றை வென்றெடுத்த நாளாகிய ஜூலை மாதம் 31 ஆம் திகதியை 2021 ஆம் ஆண்டு முதல் நடைமுறைக்கு வரும் வகையில் ஒவ்வொரு வருடமும் இலங்கையின் தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்துவதற்கு அரசாங்கத்தால் தீர்மானிக்கப்பட்டது .
இதனடிப்படையில் தேசிய விளையாட்டு தினத்தைப் பிரகடனப்படுத்தும் நிகழ்வு கல்முனை வடக்கு பிரதேச செயலகத்தில் பிரதேச செயலளார் திரு.ரி.ஜெ.அதிசயராஜ் தலைமையில் 2021.07.30 ஆம் திகதி வெள்ளிக் கிழமை மு.ப. 09.00 மணிக்கு இடம்பெற்றது.
ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்குவதே தேசிய விளையாட்டு தினத்தை பிரகடனப்படுத்துவதன் குறிக்கோளாகும் .
அதனடிப்படையில் 2021 ஜூலை மாதம் 31 ஆம் திகதியை தேசிய விளையாட்டுத் தினமாகப் பிரகடனப்படுத்தியுள்ள போதிலும் , இந்த வருடம் ஜூலை மாதம் 31 ஆம் திகதி சனிக்கிழமையாக இருப்பதனால் ஜூலை 30 ஆம் திகதி வெள்ளிக்கிழமையை தேசிய விளையாட்டுத் தினமாகக் கருதி உரிய விளையாட்டு ஊக்குவிப்பு மற்றும் உடற்பயிற்சி நிகழ்ச்சிகளை நடைமுறைப்படுத்துவது பொருத்தமானது என்று விளையாட்டுத்துறை அமைச்சு தீர்மானித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
ஆரோக்கியமான அரச சேவைச் சந்ததியொன்றை உருவாக்குவதன் மூலம் வினைத்திறனும் உற்பத்தித்திறனும் கொண்ட அரசாங்க சேவையை வழங்கும் குறிக்கோளுடன் அனைத்து அரசாங்க நிறுவனங்களிலும் தேசிய விளையாட்டு தின நிகழ்வுகள் இடம்பெற்று வருகின்றன.
06/2020 ஆம் இலக்க அரசாங்க நிருவாகச் சுற்றறிக்கைக்கு இணங்க நடவக்கை எடுத்தது போன்று இம்முறையும் நிகழ்ச்சிகள் இடம்பெற்று வருகிறது . அதன் போது தற்போது நாடு எதிர்நோக்கியுள்ள கொவிட் 19 வைரஸ் பரவலின் போது சுகாதார அமைச்சினால் வெளியிடப்படும் சுகாதார வழிகாட்டல்களுக்கும் இணக்கமான முறையில் பொருத்தமான நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டுவருகின்றன.
அந்தவகையில்,
தேசிய கொடியை ஏற்றி பின்னர் தேசிய கீதம் இசைக்கப்பட்டது.
உத்தியோகத்தர்களுக்கு ஆரோக்கியமான வாழ்க்கையின் ஊடாக பயனுறுதிவாயந்த சேவையொன்றை வழங்குவதற்காக உடற்பயிற்சியும் இடம்பெற்றது.
உள்நாட்டு உணவகளினதும் போஷாக்கினதும் முக்கியத்துவம் தொடர்பான சிறிய உரையும் இடம்பெற்றது.
ஒரு ஆரோக்கியமான சந்ததியை உருவாக்கி வினைத்திறனும் உற்பத்தித்திறனும் மிக்க மனித வளத்தை உருவாக்கும் குறிக்கோளை அடைவதற்காக மேற்படி நிகழ்ச்சிகள் நடைமுறைப்படுத்தப்பட்டது.