கொவிட் தொற்றாளர்களினால் நிரப்பியுள்ள சில அரச வைத்தியசாலைகள்..

தற்போதைய சூழ்நிலையில் கொவிட் தொற்றாளர்கள் அதிகரித்துள்ள காரணத்தினால் அரச வைத்தியசாலைகள் சிலவற்றில் இடப்பற்றாக்குறை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலை, களுபோவில வைத்தியசாலை உட்பட பல்வேறு வைத்தியசாலைகளில் இந்த நிலமை ஏற்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
கொழும்பு தேசிய வைத்தியசாலையில் தற்போது 600 பேருக்கு அதிகமானோர் சிகிச்சை பெற்று வருவதாக இலங்கை வைத்திய அதிகாரிகள் சங்கத்தின் உப தலைவர் வைத்திய மனில்க சுமகதிலக தெரிவித்துள்ளார்.