நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரிப்பால் பள்ளிகளில் தொழுகை மாற்றம்.

குருநாகல் மாவட்டத்தில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் மிகவும் மோசமான நிலையில் கொரோனா மரண விகிதங்களும் கூடிக் கொண்டு இருக்கும் நிலைமையில் ஐந்து நேர ஜமாஆத் தொழுகையையும் மற்றும் வெள்ளிக்கிழமை ஜம்ஆத் தொழுகையையும் நிலமைகள் சீராக வரும் வரையில் கூட்டாக அல்லாது , தனித் தனியாக சென்று தங்களது மார்க்கக் கடமைகளை   நிறைவேற்றுமாறு மிகவும் பணிவாக வேண்டுகோளை விடுத்துள்ளனர்.

குருநாகல் போதனா வைத்தியசாலை ஆயுர்வேத வைத்தியசாலை, குருநாகல் மாவட்ட வைத்திய சாலை மற்றும் ஏனைய வைத்தியசாலைகளிலும் கொரோனா தொற்று நோயாளர் பிரிவுகளிலுள்ள வாட்டுகளில் நோயாளிகள் அதிகளவு நிரம்பிக் காணப்படுவதால் அபாய நிலைமைகள் தோன்றுவதாக சுகாதார அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

இதனை அடுத்து பிரதமர் மஹிந்த ராஜபக்ஷவின் முஸ்லிம் விவகார இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் அவர்களுக்கு விடுத்த வேண்டுகோளின் பிரகாரம் குருநாகல் மாவட்ட பள்ளிவாசல்கள் சம்மேளனத்தின் தலைவர் எம். என். எம். சானாஸ் மற்றும் மாவட்ட செயலகத்தின் முஸ்லிம் சமய பண்பாட்டலுவல்கள் திணைக்களத்தின் அதிகாரி மௌலவி டி. எம். இஹ்சான் மரைக்கார் ஆகியோர்களது ஆலோசனையின்படி ஐந்து நேர ஜமாஆத் தொழுகையையும் வெள்ளிக்கிழமை ஜும்ஆத் தொழுகையையும் நிலைமைகள் சீராக வரையிலும் தவிர்ந்து தனித் தனியாக தங்களது மார்க்கக் கடமைகளை பள்ளிகளில் நிறைவேற்றுமாறு மிகவும் பணிவாக வேண்கோளை விடுத்துள்ளனர்.

நாட்டில் நாளுக்கு நாள் கொரோனா தொற்று அதிகரித்துள்ளதுடன் மிகவும் மோசமான நிலையில் கொரோனா மரண விகிதங்களும் கூடிக் கொண்டு இருக்கும் நிலைமையில் முக்கியமாக இந்த மரண விகிதத்தில் முஸ்லிம்களுடைய விகிதார சாரம் வருத்தப்படக் கூடியளவுக்கும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாதளவுக்கும் அதிகரித்துள்ளது.

இதன் மூலம் அதிகமான பாதிப்புக்களுக்கு முஸ்லிம்கள் உள்ளாவதைத் தவிர்ப்தன் நோக்கடத்துடனேயே இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதுடன் இது சம்மந்தமாக வக்பு சபையின் தலைவர் சட்டத்தரணி சப்ரி ஹலீம்தீன் , முஸ்லிம் சமய கலாசார பண்பாடட்டலுவல்கள் திணைக்களத்தின் புதிய பணிப்பாளர் அன்வர் அலி அவர்களது ஆலோசனை பெறப்பட்டுள்ளதாகவும் இந்தவொரு ஒரு இக்கெட்டான நிலையில் சுகாதார விதிமுறைகளைப் பேணி கொவிட் தொற்றில் இருந்து பாதுகாப்பு பெறுவதுடன் இந்த நிலையில் இருந்து எங்களை மீட்டித் தருமாறு இறைவனிடம் பிரார்த்தனை செய்யுமாறு பிரதமரின் இணைப்புச் செயலாளர் அப்துல் சத்தார் மேலும் கேட்டுக் கொண்டார்.

எமது செய்தியாளர் : இக்பால் அலி
05-08-2021

Leave A Reply

Your email address will not be published.