45,831 குழந்தைகளுக்கு கொரோனா, 10 குழந்தைகள் மரணம் : சஜித் கேட்ட கேள்விக்கு பவித்ராவின் பதில்
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி இன்று (5) நாடாளுமன்றத்தில் 45,831 குழந்தைகள் கோவிட் நோயால் பாதிக்கப்பட்டுள்ளதாகவும், இதுவரை 18 வயதுக்குட்பட்ட 14 குழந்தைகள் இறந்துள்ளதாகவும் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச எழுப்பிய கேள்விக்கு சுகாதார அமைச்சர் பதிலளித்தார்.
மேலும் கோவிட் நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கையில் 10 வயதிற்குட்பட்ட 19,688 குழந்தைகள் மற்றும் 10 மற்றும் 18 வயதிற்குட்பட்ட 26,143 குழந்தைகள் அடங்குவதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்தார்.
இலங்கையில் கோவிட் 19 நோயால் பாதிக்கப்பட்ட குழந்தைகளின் எண்ணிக்கை கணிசமாக அதிகரித்து வருவதாகவும்,
இறந்துள்ள குழந்தைகள் 14 பேரில் 0-5 வயதுடைய 7 குழந்தைகள், 6-10 வயதுடைய 3 குழந்தைகள், 11-15 வயதுடைய 2 குழந்தைகள் மற்றும் 16-18 வயதுடைய 2 குழந்தைகள் அடங்குவதாக சுகாதார அமைச்சர் தெரிவித்தார்.