மட்டக்களப்பு பிரதான வீதியில் விபத்து – இருவர் படுகாயம்.

கல்முனை – மட்டக்களப்பு பிரதான வீதியின் கிராங்குளத்தில் இடம்பெற்ற விபத்து சம்பவத்தில் இருவர் படுகாயமடைந்த நிலையில் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
கல்முனை பக்கமிருந்து மட்டக்களப்பு நோக்கி மோட்டார் சைக்கிள் ஒன்று பயணித்து கொண்டிருந்த வேளை அதே திசையில் எதிரே சென்று கொண்டிருந்த மோட்டார் சைக்கிள் சடுதியாக திரும்புவதற்கு முற்படுகையில் இரு மோட்டார் சைக்கிள்களும் ஒன்றோடு ஒன்று மோதியதால் விபத்து ஏற்பட்டுள்ளது.
இதில் மோட்டார் சைக்கிளைச் செலுத்திச் சென்ற இருவரும் காயங்களுக்குட்பட்டு ஆரையம்பத்தி மாவட்ட வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டுள்ளனர்.
இந்நிலையில் இரண்டு மோட்டார் சைக்கிள்களுக்கும் பலத்த சேதம் ஏற்பட்டுள்ளன.
இவ்விபத்துச் சம்பவம் தொடர்பில் காத்தான்குடி பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.