கொரோனா மரணங்கள் பட்டியலில் உலகளவில் இலங்கைக்கு கிடைத்த இடம்

இலங்கையில் கொரோனா மரணங்கள் அண்மைய நாட்களாக அதிகரித்து வரும் நிலையில் உலக அளவில் கொரோனா மரணங்கள் ஏற்படும் நாடுகளின் பட்டியலில் இலங்கை 22ம் இடத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.
மேலும் ஆசிய வலயத்தில் கொரோனா மரணங்கள் அதிகம் இடம்பெறும் நாடுகளின் வரிசையில் இலங்கை 12வது இடத்தில் உள்ளது.
சர்வதேச அளவில் முன்னெடுக்கப்பட்ட கணிப்பின் அடிப்படையில் ஒவ்வொரு 10 லட்சம் பேருக்கும் 220 பேர் இலங்கையில் மரணிப்பதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
கடந்த வாரத்தில் மரணங்கள் நாளொன்றுக்கு 50 தொடக்கம் 60 வரை பதிவாகியது. அதன் பின்னர் தொடர்ச்சியாக 70 தொடக்கம் 80 வரையான மரணங்கள் நாளாந்தம் பதிவாகி வருகின்றன. நேற்று முன்தினம் மாத்திரம் 82 கொரோனா மரணங்கள் பதிவாகியுள்ளன.