பளுதூக்குதலில் மற்றுமொரு உலக சாதனை.

நேற்று நடைபெற்ற ஆண்களுக்கான 109 கிலோ எடைப் பிரிவுக்கு மேற்பட்ட பளுதூக்குதலில் ஜோர்ஜியா நாட்டு வீரர் லாஷ தலகட்சே, தன்னுடைய மூன்று உலக சாதனைகளை முறியடித்து தங்கப் பதக்கம் வென்றார்.
குறித்த போட்டியில் ஸ்னெட்ச் முறையில் 223 கிலோ எடையையும், க்ளீன் அண்ட் ஜேர்க் முறையில் 265 கிலோ எடையையும் தூக்கிய அவர், ஒட்டுமொத்தத்தில் 488 கிலோ எடையைத் தூக்கி உலக சாதனை படைத்தார்.