நீச்சல் மரதனில் ஐந்து தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்ற அனா.
ஜப்பானின் ஒடைபா மெரிக் பார்க்கில் நேற்று காலை நடைபெற்ற பெண்களுக்கான 10 கிலோ மீட்டர் நீச்சல் மரதனில் பிரேசில் வீராங்கனை அனா மர்செலா சுன்ஹா தங்கப் பதக்கம் வென்றார். போட்டியை அவர் ஒரு மணித்தியாலமும் 59.30.8 செக்கன்களில் நிறைவுசெய்தார்.
நீச்சல் மரதனில் ஐந்து தடவைகள் உலக சம்பியன் பட்டம் வென்று அனா, 16 வயதில் அதாவது 2008 பீஜிங் ஒலிம்பிக்கில் முதல்தடவையாக இந்தப் போட்டியில் களமிறங்கியிருந்தாலும், இதுதான் அவரது முதல் ஒலிம்பிக் பதக்கமாகும்.
இதனிடையே, 2016 ரியோ ஒலிம்பிக்கில் தங்கம் வென்ற நெதர்லாந்து வீராங்கனை ன்ஷரொன் வான் ருவென்டால் வெள்ளிப் பதக்கத்iயும், அவுஸ்திரேலியாவின் கரீனா லீ வெண்கலப் பதக்கத்தையும் சுவீகரித்தனர்.