உங்களுக்கு 18வயது நிறைவடையப் போகிறதா இதை மிஸ் பண்ணாதீங்க!
தமிழகத்தில் வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றிற்காக நவம்பர் ஒன்றாம் தேதியில் இருந்து ஒருமாதம் நடைபெறு என தமிழக தேர்தல் ஆணையம் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இது குறித்து வெளியிடப்பட்டுள்ள செய்திக்குறிப்பில், வாக்காளர் பட்டியலில் பெயர் பதிவு செய்தல், நீக்கம், திருத்தம், இடமாற்றம் ஆகியவற்றிற்காக நவம்பர் 1ஆம் தேதியில் இருந்து நவம்பர் 30ஆம் தேதி வரை விண்ணப்பிக்கலாம். வரும் 01.01.2022 அன்று 18 வயது நிறைவடைந்தவர்களும், வாக்காளர் பட்டியலில் பெயர் இல்லாதவர்களும் பெயர் சேர்க்க விண்ணப்பிக்கலாம்.
பெயர் சேர்த்தலுக்கான விண்ணப்பத்துடன் வசிப்பிட முகவரி மற்றும் வயது ஆகியவற்றுக்கான சான்றிதழ் சமர்பிக்கப்பட வேண்டும். இந்திய பாஸ்போர்ட் / ஓட்டுநர் உரிமம் / குடும்ப அட்டை / சமீபத்திய குடிநீர் / தொலைபேசி / மின்சாரம் / சமையல் எரிவாயு இணைப்பு ரசீது / வங்கி / கிஸான்/ அஞ்சல் அலுவலக சமீபத்திய கணக்கு புத்தகம் ஆகிய ஏதேனும் ஒன்றின் நகலை முகவரிச் சான்றாக சமர்ப்பிக்கலாம்.
புகைப்பட அடையாள அட்டை தொலைந்து போதல் / இடம் தவறவிடல் ஆகிய காரணங்களுக்காக வட்டாட்சியர் / மண்டல அலுவலகத்தில் படிவம் 001-ல் விண்ணப்பிக்கலாம். வெளிநாட்டில் வாழும் இந்தியக் குடிமக்களின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் சேர்க்கப்பட, சம்பந்தப்பட்ட வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6Aஐ நேரில் அளிக்க வேண்டும் அல்லது தபாலிலும் படிவத்தை அனுப்பலாம்.
Must Read : இந்தியாவில் அதிகரிக்கும் கொரோனா… 3ஆவது அலையா? – டாக்டர் அனுராக் அகர்வால் விளக்கம்
வாக்காளர் பதிவு அதிகாரியிடம் படிவம் 6Aஐ நேரில் அளிக்கும்போது அதனுடன் விண்ணப்பதாரரின் புகைப்படம், ஏனைய பிற விவரங்களுடன் விசாவின் செயல்திறன் பற்றிய மேற்குறிப்பு அடங்கிய பாஸ்போர்ட் தொடர்புடைய பக்கங்களின் நகலையும் சேர்த்து அளிக்க வேண்டும்.
Follow @ Google News: கூகுள் செய்திகள் பக்கத்தில் நியூஸ்18 தமிழ் இணையதளத்தை இங்கே கிளிக் செய்து ஃபாலோ செய்யுங்கள்.. செய்திகளை உடனுக்குடன் பெறுங்கள்.
வாக்காளர் பதிவு அதிகாரி ஒரிஜினல் பாஸ்போர்ட்டை ஒப்பிட்டுச் சரிபார்த்து உடனடியாக திரும்பக் கொடுத்து விடுவார். படிவம் 6Aஐ தபாலில் அனுப்பும் போது கடவுசீட்டின் நகல்கள் சுய சான்றொப்பமிட்டு இணைக்க வேண்டும்” இவ்வாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.