அனைத்து அரசு விழாக்களும் ரத்து ! பண்டிகைகளுக்கு தடை! மரண சடங்கு மட்டுப்படுத்தப்பட்டுள்ளது
இன்று முதல் செப்டம்பர் 01 வரை அனைத்து அரசு விழாக்களையும் ரத்து செய்ய நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
மேலும், திருமணங்களை நடத்துவதில் பின்பற்ற வேண்டிய வழிகாட்டுதல்கள் திருத்தப்பட்டுள்ளன.
அதன்படி, விழா மண்டபங்களில் 500 க்கும் மேற்பட்ட இருக்கைகள் இருந்தால், அங்கு நடைபெறும் திருமணத்தில் அதிகபட்சம் 150 பேர் கலந்து கொள்ளலாம்.
ஒரு விருந்து மண்டபத்தில் இருக்கைகளின் எண்ணிக்கை 500 க்கும் குறைவாக இருந்தால், அத்தகைய இடத்தில் நடைபெறும் திருமணத்தில் அதிகபட்சம் 100 பேர் மட்டுமே கலந்து கொள்ள முடியும்.
இதற்கிடையில், ஒரே நேரத்தில் இறுதிச் சடங்கில் கலந்து கொள்ளக்கூடிய அதிகபட்ச நபர்களின் எண்ணிக்கை 25 ஆக வரையறுக்கப்பட்டுள்ளது.
இந்த திருத்தங்கள் இன்று (06) நள்ளிரவு முதல் அமலுக்கு வரும்.