இங்கிலாந்து அணியின் ஜேம்ஸ் ஆண்டர்சன் கிரிக்கெட் அரங்கில் புதிய மைல்கல் ஒன்றை எட்டியுள்ளார்.
மழை காரணமாக போட்டியின் மூன்றாம் நாளான இன்றைய ஆட்டம் தாமதமாகவே துவங்கியது,
உணவு இடைவேளைக்கு பிறகு போட்டி துவங்கிய சில நிமிடங்களில் ஜேம்ஸ் ஆண்டர்சன் வீசிய துல்லியமான பந்தில் கே.எல் ராகுல் (84 ரன்கள்) விக்கெட்டை இழந்தார்.
இந்தநிலையில், கே.எல் ராகுல் விக்கெட்டை கைப்பற்றியதன் மூலம், சர்வதேச டெஸ்ட் அரங்கில் தனது 620வது விக்கெட்டை பதிவு செய்த ஆண்டர்சன், இதன் மூலம் சர்வதேச டெஸ்ட் போட்டிகளில் அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முன்னாள் ஜாம்பவான் அணில் கும்ப்ளேவை (619 விக்கெட்) பின்னுக்கு தள்ளியுள்ளார்.
அதிக விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் முதலிடத்தில் முத்தையா முரளிதரன் 800 விக்கெட்டுகளுடன் முதலிடத்தில் உள்ளார். இரண்டாவது இடத்தில் சேன் வார்ன் 708 விக்கெட்டுகளுடன் உள்ளார், ஜேம்ஸ் ஆண்டர்சன் 620 விக்கெட்டுகளுடன் தற்போது மூன்றாவது இடத்திற்கு முன்னேறியுள்ளதால், அணில் கும்ப்ளே 4வது இடத்திற்கு பின்னதள்ளப்பட்டுள்ளார்.