மூன்றாம் நாள் முடிவில் 2 வது இன்னிங்சில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது.
இந்தியா-இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி நாட்டிங்காமில் நடைபெற்று வருகிறது. முதலில் ஆடிய இங்கிலாந்து அணி, முதல் இன்னிங்சில் 183 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்தது.
இங்கிலாந்து தரப்பில் ராபின்சன் 5 விக்கெட்டுகளும் ஜேம்ஸ் ஆண்டர்சன் 4 விக்கெட்டுகளும் கைப்பற்றினர்.
இதையடுத்து 95 ரன்கள் பின்தங்கிய நிலையில், இங்கிலாந்து அணி இரண்டாம் இன்னிங்சை தொடங்கியது. தொடக்க வீரர்களாக ரோரி பர்ன்ஸ், டாம் சிப்லி களமிறங்கினர்.
11.1 ஓவர்கள் வீசிய நிலையில் இங்கிலாந்து அணி விக்கெட் இழப்பின்றி 25 ரன்கள் எடுத்திருந்தது. அப்போது மழை பெய்ததால் ஆட்டம் தடைபட்டது. தொடர்ந்து பெய்த மழையால ஆட்டம் கைவிடப்பட்டது.
மூன்றாம் நாள் முடிவில் இங்கிலாந்து 25 ரன்கள் எடுத்துள்ளது. ரோரி பர்ன்ஸ் 11 ரன்னும், டாம் சிப்லி 9 ரன்னுடனும் களத்தில் உள்ளனர். இந்தியாவை விட 70 ரன்கள் பின்தங்கியுள்ளது.