அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவருக்கான அனுதாபச்செய்தி.

இலங்கையில் இன மத மொழி, பிரதேச வேறுபாடுகளின்றி அதிகளவு சமூகப் புணி புரிந்து வந்த மறைந்த தொழிலதிபர் இஸட் . ஏ. எம். எம். ரிபாய் அவர்களுடைய மரணம் முஸ்லிம் சமூகத்திற்கு மட்டுமல்ல இந்நாட்டில் வாழும் ஏனைய மக்களுக்கும் பெரும் பேரிழப்பாகும் என்று அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி தெரிவித்தார்.
பிரபல தொழிலதிபரும் சமூக சேவையாளருமான இஸட் . ஏ. எம். எம். ரிபாய் அவர்களுடைய மரணம் தொடர்பில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தேசிய தலைவர் சஹீட் எம். ரிஸ்மி விடுத்துள்ள அனுதாபச் செய்தியில் இவ்வாறு இதனை தெரிவித்துள்ளார்.
அவர் தொடர்ந்து கருத்து தெரிவிக்கையில்
2013 ஆம் ஆண்டு சர்வதேச பண்டாரநாயக மாநாட்டு மண்டபத்தில் அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் 63 வது மாநாடு நடைபெற்றது. அதன் போது இலங்கையின் சிறந்த முயற்சியாளர் என்ற தேசிய விருது வழங்கி அந்நார் கௌரவிக்கப்பட்டவர். அந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்து கொண்ட அமைச்சர் பசில் ராஜபக்ஷ அந்நாருக்கு விருது வழங்கி கௌரவித்தார். இந்த கௌரவம் அந்நாருக்கு கிடைத்த அதி உன்னத கௌரவாகும்.
நவீன காலத்தில் நமது சமூகம் பின்தங்கி விடக் கூடாது என்ற நிலையில் பாரிய கல்விப் பணிகளைச் செய்த ஒருவர். அந்நாரது இழப்பு முஸ்லிம் சமூகத்திற்கும் ஏனைய சமூகத்திற்கும் பெரும் பேரிழப்பாகும்.
எனவே அந்நாரது இழப்பினால் துயரற்றுள்ள அவரது குடும்பத்தினர்கள், உறவினர்கள் அனைவருக்கும் எமது அமைப்பின் சார்பாக ஆழ்ந்த அனுதாபங்களைக் தெரிவித்துக் கொள்வதாக என்று அவர் மேலும் தெரிவித்தார்.
(இக்பால் அலி)