கம்பஹா மாவட்டத்தில் தொடரும் ஆபத்து 18,937 கொரோனா தொற்றாளர்கள் வீடுகளிலேயே தனிமைப்படுத்தல்!
கம்பஹா மாவட்டத்தில் கடந்த 24 மணித்தியாலங்களில் 1,839 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளனர் என்று மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் இன்று காலை தெரிவித்துள்ளது.
இதற்கமைவாக கொரோனா வைரஸ் தொற்றின் இரண்டாம் அலையில் கம்பஹா மாவட்டத்தில் 75 ஆயிரத்து 987 தொற்றாளர்கள் இனங்காணப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இதற்கமைவாக மஹர பிரிவில் 236 தொற்றாளர்களும், பியகம பிரிவில் 185 தொற்றாளர்களும், சீதுவ பிரிவில் 171 தொற்றாளர்களும், களனிப் பிரிவில் 159 தொற்றாளர்களும், அத்தனகல்ல பிரிவில் 150 தொற்றாளர்களும், மினுவாங்கொடைப் பிரிவில் 145 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
அதேவேளை, கம்பஹா பிரிவில் 139 தொற்றாளர்களும், மீரிகம பிரிவில் 136 தொற்றாளர்களும், வத்தளைப் பிரிவில் 135 தொற்றாளர்களும், தொம்பே பிரிவில் 110 தொற்றாளர்களும், கட்டான பிரிவில் 96 தொற்றாளர்களும், ராகம பிரிவில் 70 தொற்றாளர்களும், நீர்கொழும்பு பிரிவில் 43 தொற்றாளர்களும், ஜா – எல பிரிவில் 34 தொற்றாளர்களும், திவுலப்பிட்டிய பிரிவில் 30 தொற்றாளர்களும் இனங்காணப்பட்டுள்ளனர்.
இவர்களில் 18 ஆயிரத்து 937 பேர் வீடுகளிலேயே தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.
தொற்றாளர்கள் தொகை அதிகரித்து வருவதால் பொதுமக்கள் உரிய சுகாதார விதிமுறைகளைப் பின்பற்றி நடக்குமாறு கம்பஹா மாவட்ட சுகாதார சேவைகள் பணிப்பாளர் காரியாலயம் பொதுமக்களை கோரியுள்ளது.