கீரிமலை சென்றவர்களுக்கு அன்டிஜன் பரிசோதனைகள்.

ஆடி அமாவாசை தினமான இன்று யாழ். கீரிமலைப் பகுதியில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடிய நிலையில் அன்டிஜன் பரிசோதனை நடவடிக்கை அங்கு மேற்கொள்ளப்பட்டது.
சுகாதாரப் பாதுகாப்பு நடைமுறைகளுக்கு அமைவாக ஆலயங்களுக்கு வெளியே அதிகளவான பக்தர்கள் கூடுவதற்குத் தடை விதிக்கப்பட்டிருக்கும் நிலையில் பிதிர்க்கடன் செலுத்த அதிகளவான மக்கள் கூடியதால் இந்த அன்டிஜன் பரிசோதனை முன்னெடுக்கப்பட்டது.