தொற்றாளர் தொகை மேலும் அதிகரித்தால் சிகிச்சையளிக்கும் பணியில் முப்படையினர் சுகாதார அமைச்சு தெரிவிப்பு.
“இலங்கையில் எதிர்வரும் நாட்களில் கொரோனா வைரஸ் தொற்றாளர்களின் எண்ணிக்கை மேலும் அதிகரிக்குமாயின் சிகிச்சை நடவடிக்கைகளுக்கு உதவியளிப்பதற்காக முப்படையினர், சுகாதாரப் பிரிவில் ஓய்வுபெற்றுச் சென்ற அதிகாரிகள் மற்றும் தனியார் பிரிவில் சுகாதார ஊழியர்கள் உள்ளிட்ட குழுவினரை நியமிப்பதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.”
இவ்வாறு பிரதி சுகாதார சேவைகள் பணிப்பாளர் விசேட வைத்தியர் ஹேமந்த ஹேரத் இன்று ஊடகங்களிடம் தெரிவித்தார்.
அவர் மேலும் தெரிவித்ததாவது:-
“கொரோனாத் தொற்றாளர்களை சிகிச்சை நிலையங்களுக்கு அழைத்துச் செல்வதற்கு போதிய அம்புலன்ஸ் வசதிகள் இல்லையாயின் பிரதேச மட்டத்தில் அதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்ளுமாறு அனைத்து மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர்களுக்கும் அறிவுறுத்தப்பட்டுள்ளது.
மரண எண்ணிக்கை அதிகரிப்பதால் தொற்றாளர்கள் அனைவரும் தீவிர சிகிச்சைக் கண்காணிப்புக்குள் உட்படுத்தப்பட வேண்டும்” – என்றார்.