அனைத்து கொரோனா மரணங்களுக்கும் சவேந்திர சில்வா தரப்பு செயலணியே பொறுப்பு : ரணில்

நாட்டில் இடம்பெறும் அனைத்து கொரோனா மரணங்களுக்கும் இராணுவத் தளபதி சவேந்திர சில்வா தலைமையிலான கொரோனா ஒழிப்பு செயலணி பொறுப்புக்கூற வேண்டும் என ஐக்கிய தேசியக் கட்சியின் தலைவர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
கொரோனா ஒழிப்பு நடவடிக்கையில் இந்த செயலணி தோல்வியுற்றுள்ளதால் அரசாங்கம் உடனடியாக அதனை கலைத்துவிட்டு சட்டரீதியான குழுக்களுக்கு கொரோனா ஒழிப்பு பொறுப்பினை வழங்க வேண்டும் என அவர் கோரிக்கை விடுத்துள்ளார்.
சுகாதார வைத்திய நிபுணர்கள் அடங்கிய அனர்த்த முகாமைத்துவ சபை உருவாக்கப்பட்டுள்ள அமைச்சரவைக்கு அதிகாரம் கொடுத்து நாடாளுமன்றத்துக்கு பொறுப்புக் கொடுத்து கொரோனா ஒழிப்புத் திட்டம் முன்னெடுக்கப்பட வேண்டும் என ரணில் விக்ரமசிங்க கூறியுள்ளார்.