கொரோனா நோயாளிகளுக்கான வீட்டு சிகிச்சை முறை இன்று (09) முதல் ஆரம்பம் …
கடும் பாதிப்பு இல்லா கோவிட் தொற்றினால் பாதக்கப்பட்டுள்ளோருக்கான வீட்டு சிகிச்சை முறை இன்று (09) முதல் அவரவர் வீடுகளிலிருந்து தொடங்குகிறது.
முன்னோடி திட்டமாக மேற்கு மாகாணத்தில் மட்டுமே நடைமுறைப்படுத்தப்பட்டு வந்த இந்த முறை இன்று முதல் நாடளாவிய ரீதியில் நடைமுறைப்படுத்தப்படும் என சுகாதார அமைச்சு தெரிவித்துள்ளது.
2 முதல் 65 வயதுக்குட்பட்ட நபர்கள் கொரோனா அறிகுறிகளைக் காட்டும் அல்லது சிறிய அறிகுறிகளைக் காட்டும் நபர்கள் மருத்துவ மேற்பார்வையின் கீழ் வீட்டில் சிகிச்சை பெற வேண்டும்.
தினசரி கோவிட் நோயாளிகளின் எண்ணிக்கை அதிகரித்து வருவதாலும், மருத்துவமனைகளில் இடப் பற்றாக்குறை உருவாகி இருப்பதாலும் இந்த முடிவு எடுக்கப்பட்டது.
பிசிஆர் அல்லது ஆன்டிஜென் சோதனைக்குப் பின்னர் கோவிட் தொற்று இருப்பது கண்டறியப்பட்ட நோயாளிகள் உள்ளூர் சுகாதார அதிகாரியால் பரிசோதிக்கப்பட்டு வீட்டிலேயே சிகிச்சை பெற பரிந்துரைக்கப்படுவர்.
சம்பந்தப்பட்ட சுகாதார வழிகாட்டுதல்களின்படி பாதிக்கப்பட்ட நபருக்கு வீட்டில் சிகிச்சை அளிக்க ஏற்பாடு செய்யப்படும் என்றும், தொலைபேசி மூலம் பதிவு செய்த பிறகு நோயாளி மருத்துவ மேற்பார்வையில் வைக்கப்படுவார் என்றும் சுகாதார அமைச்சகம் கூறுகிறது.
24 மணி நேர ஹாட்லைன் எண் 1390 மூலம் தொடர்புடைய நடவடிக்கைகள் ஒருங்கிணைக்கப்படும்.