எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு , பால்மா தொடர்பில், அமைச்சரவை கூட்டத்தில் அதிக கவனம்.

நாட்டில் தற்போது காணப்படும் பால் மா மற்றும் எரிவாயு சிலிண்டர் தட்டுபாடு தொடர்பில், நேற்றைய (09) அமைச்சரவை கூட்டத்தில் அதிக கவனம் செலுத்தப்பட்டுள்ளது.
அதன்படி , எரிவாயு தட்டுப்பாட்டை நிவர்த்தி செய்யும் வகையில், லாஃப் எரிவாயு சிலிண்டர்களை பெற்றுக்கொண்டு லிட்ரோ எரிவாயு சிலிண்டர்களை வழங்க லிட்ரோ நிறுவனம் இணக்கம் தெரிவித்துள்ளதாக அமைச்சரவை கூட்டத்தில் கருத்துக்கள் வெளியிடப்பட்டுள்ளன.
அதேபோன்று, இறக்குமதி செய்யப்படும் பால்மாக்களுக்கு நிவாரணங்களை வழங்கவும் இணக்கம் எட்டப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.
இதன்படி, பால்மா இறக்குமதிக்கு அரசாங்கத்தினால் விதிக்கப்பட்டிருந்த சில வரிகளை குறைப்பதற்கு தீர்மானிக்கப்பட்டுள்ளதாக அறிய முடிகின்றது.
மேலும் ,நுகர்வோருக்கும், நிறுவனங்களுக்கும் பாதிப்புக்கள் ஏற்படாத வகையில், இந்த நடவடிக்கை முன்னெடுக்கப்படவுள்ளதாக அரசாங்க தரப்பு தகவல்கள் தெரிவிக்கின்றன.