நாட்டை 4 வாரங்களுக்கு முடக்குங்கள் : சுகாதார அமைச்சு அரசுக்கு அறிவுறுத்தல்
உடனடியாக நான்கு வார காலத்திற்கு தனிமைப்படுத்தப்பட்ட ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துமாறு சுகாதார அமைச்சகம் , அரசு அதிகாரிகளுக்கு அறிவுறுத்தியுள்ளது.
சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி மற்றும் சுகாதார சேவைகள் பணிப்பாளர் நாயகம் டாக்டர் அசேல குணவர்தன ஆகியோருக்கு இந்த வேண்டுகோளை முன்வைத்துள்ளனர்.
இலங்கையில் தினசரி கொவிட் நோயாளிகளின் எண்ணிக்கை 3000 என்ற வரம்பை எட்டியதாலும் , டெல்டா வகை 100% வேகமாக பரவுவதுமே இதற்குக் காரணம்.
தினசரி இறப்பு வீத எண்ணிக்கை 100 ஐ நெருங்குகிறது. பெரும்பாலான இறப்புகள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள். தினசரியாக கிடைக்கும் கணிப்பீட்டின்படி கொவிட் நோய்த்தொற்றுகளில் பெரும்பாலானவை மேற்கு மாகாணத்தில் இருந்து பதிவாகின்றன. அந்த எண்ணிக்கை 1500 வரை உள்ளது. அந்த எண்ணிக்கையின் பெரும்பகுதி கொழும்பு மாவட்டத்திலிருந்தே பதிவாகியுள்ளது.
ஊரடங்கு உத்தரவை அமல்படுத்துவது குறித்த இறுதி முடிவு ஜனாதிபதியால் எடுக்கப்படும் என சுகாதார அமைச்சகம் நம்புகிறது என அக்குறிப்பில் மேலும் தெரிவிக்கப்பட்டுள்ளது .
இருப்பினும் , தடுப்பூசி போடப்படுவதால் நாட்டை மூட வேண்டிய தேவை இல்லை என ஜனாதிபதி முன்னரே தெரிவித்திருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.