மக்கள் வெளியில் செல்வதை இயலுமானவரை தவிருங்கள் மாகாணப் பயணத் தடை நீடிப்பு என்கிறார் பொலிஸ் பேச்சாளர்.
நாட்டில் கொரோனாப் பரவல் தீவிரமடைந்துள்ளதால் மக்கள் வீட்டுக்கு வெளியில் செல்வதை இயலுமானவரைத் தவிர்க்க வேண்டும் என்று பொலிஸ் ஊடகப் பேச்சாளர் சிரேஷ்ட பிரதிப் பொலிஸ்மா அதிபர் அஜித் ரோஹண கேட்டுக்கொண்டார்.
மாகாணப் பயணக் கட்டுப்பாடு மறு அறிவித்தல் வரை தொடரும் என்றும் அவர் நேற்று குறிப்பிட்டார்.
இதேவேளை, தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய மேலும் 107 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் கூறினார்.
நாட்டில் தனிமைப்படுத்தல் சட்டத்தை மீறிய குற்றச்சாட்டில் இதுவரை மொத்தமாக 53 ஆயிரத்து 804 பேர் கைதுசெய்யப்பட்டுள்ளனர் என்றும் அவர் தெரிவித்தார்.
அவர் இன்று வெளியிட்டுள்ள நாளாந்தப் பொலிஸ் அறிவிப்புக்களைத் தெரிவிக்கும் காணொளிப் பதிவிலேயே மேற்கண்டவாறு கூறினார்.