யாழ். மாவட்டத்தில் இன்று 48 பேருக்குக் கொரோனா!

யாழ்ப்பாணம் மாவட்டத்தில் இன்று 48 பேருக்குக் கொரோனா வைரஸ் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.
யாழ். போதனா வைத்தியசாலை ஆய்வுகூடத்தில் மேற்கொள்ளப்பட்ட பி.சி.ஆர். பரிசோதனையில் குறித்த தொற்றாளர்கள் அடையாளம் காணப்பட்டுள்ளனர்.
அதன்படி யாழ்.போதனா வைத்தியசாலையில் 36 பேருக்கும், பருத்தித்துறை ஆதார வைத்தியசாலையில் 09 பேருக்கும், சங்கானை பிரதேச வைத்தியசாலையில் 03 பேருக்கும் கொரோனாத் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது.