திருகோணமலை மாவட்ட கொவிட் செயலணிக்கூட்டம்.
தற்போதைய சூழ்நிலையில் மக்கள் சுகாதார நடைமுறைகளை பொறுப்புடன் கடைப்பிடித்தல் வேண்டும்.குறிப்பாக முகக்கவசம் அணிதல்,கைகளை கழுவல், சமூக இடைவெளி பேணல், அநாவசிய பயண தவிர்ப்பு, ஒன்றுகூடல் உள்ளிட்ட விடயங்களிலிருந்து தவிர்ந்திருப்பதன் மூலம் கொவிட் பரவலை தடுத்து இயல்புநிலையை பேண முடியும்.இவ்விடயத்தில் அனைவரும் உறுதிபூண்டு செயற்படல் வேண்டும்.
தடுப்பூசி பெற தகுதியான வயதுப்பிரிவினர் இதுவரை பெறாவிடின் உடன் தடுப்பூசிகளை பெற்றுக்கொள்ளுமாறும் இதன்போது அரசாங்க அதிபர் தெரிவித்தார்.
கொவிட் பரவலை கட்டுப்படுத்த மாவட்ட மட்டத்தில் மேற்கொள்ள வேண்டிய செயற்பாடுகள் உள்ளிட்ட பல விடயங்கள் இதன்போது கலந்துரையாடப்பட்டன.
இக்கூட்டத்தில் மேலதிக அரசாங்க அதிபர் ஜே.எஸ்.அருள்ராஜ்,முப்படை, பொலிஸ் அதிகாரிகள், சுகாதார துறை அதிகாரிகளும் கலந்து கொண்டனர்.