மாநகர சபையின் பொதுமக்களுக்கான அனைத்து சேவைகளும் தற்காலியமாக இடைநிறுத்தம்.
மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பிரிவுக்குட்பட்ட பொதுசுகாதார பிரிவுகளில் கொரோனா வைரஸ் தொற்று பரவல் அதிகரித்துள்ள நிலையில் கொரோனா வைரஸ் தொற்றில் இருந்து பொதுமக்களை பாதுகாக்கும் வகையில் தொடர்ச்சியாக பி சி ஆர் , மற்றும் ரபிட் அன்டிஜன் பரிசோதனைகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன.
அந்தவகையில் நேற்றைய தினம் மட்டக்களப்பு சுகாதார வைத்திய அதிகாரி அலுவலக பொதுசுகாதார பரிசோதகர்களினால் மட்டக்களப்பு மாநகர சபை ஊழியர்களுக்கு மேற்கொள்ளப்பட்ட ரபிட் அன்டிஜன் பரிசோதனையில் பல ஊழியர்களுக்கு கொரோனா வைரஸ் தொற்றுக்குள்ளானவர்கள் என இனங்காணப்பட்டதை தொடர்ந்து பொதுமக்களின் பாதுகாப்பு நலன் கருதி மாநகர சபையின் பொதுமக்களுக்கான சேவைகள் தற்காலியமாக நிறுத்தி வைக்கப்பட்டுள்ளதாக மாநகர ஆணையாளர் எம்.தயாபரன் தெரிவித்துள்ளார்.
மேலும் பொதுமக்களின் அத்தியாவசிய தேவைகள் நிமித்தம் 065 22 22 275 என்ற தொலைபேசி இலக்கத்தின் ஊடாக தகவல்களை பெற்றுக்கொள்ள முடியும் என மாநகர ஆணையாளர் தெரிவித்துள்ளார்.