தனியார் வைத்தியசாலைகளில் பி.சி.ஆர் மற்றும் அன்டிஜன் பரிசோதனை கட்டணத்தை நிர்ணயம் செய்ய சுகாதார அமைச்சு நடவடிக்கை.
இது தொடர்பான வர்த்தமானி அறிவித்தல் நாளை வெளியிடப்பட உள்ளதாக சுகாதார அமைச்சர் பவித்ரா வன்னியாராச்சி தெரிவித்துள்ளார்.
பி.சி.ஆர் பரிசோதனைக்காக ஆகக்கூடிய கட்டணம் 6,500 ரூபாவும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைக்காக 2,000 ரூபாவும் அறவிட முடியும் என அமைச்சில் இன்று இடம்பெற்ற ஊடக சந்திப்பில் அவர் கூறினார்.
சுகாதார அமைச்சு, கூட்டுறவு சேவை, விற்பனை அபிவிருத்தி மற்றும் நுகர்வோர் பாதுகாப்பு இராஜாங்க அமைச்சு ஆகின இணைந்து மேற்கொண்ட பேச்சுவார்த்தையில் இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளது.
இந்த நடவடிக்கையால் தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனை மற்றும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனை செயலிழக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
தனியார் வைத்தியசாலைகளில் முன்னெடுக்கப்படும் பிரிஆர் பரிசோதனைகளின் தரம் மற்றும் விலை குறித்து அதிக முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக இராஜாங்க அமைச்சர் லசந்த அழகியவன்ன தெரிவித்துள்ளார்.
சில தனியார் வைத்தியசாலைகளில் பிசிஆர் பரிசோதனைக்கு 9000 ரூபாவும் ரெபிட் அன்டிஜன் பரிசோதனைக்கு 5000 ரூபாவும் அறவிடப்படுவதாக அவர் கூறினார்.
இந்நிலையில் இந்த விலை நிர்ணயத்திற்கு தனியார் வைத்தியசாலைகள் எதிர்ப்பு வௌியிட்டுள்ளன.
பிசிஆர் பரிசோதனைகளை முன்னெடுக்கும் திட்டத்தையும் இராணுவத்தினருக்கு வழங்கும் முயற்சியாக இந்த விலை நிர்ணயம் இருக்கக் கூடும் என தனியார் வைத்தியசாலை உரிமையாளர்கள் தெரிவிக்கின்றனர்.