பாடசாலை மாணவர்களின் கல்வியில் அரசு விளையாடக்கூடாது! – இராதாகிருஷ்ணன் எம்.பி. வலியுறுத்து.

பாடசாலை மாணவர்களின் கல்வியில் அரசு விளையாடக்கூடாது என்று ஐக்கிய மக்கள் சக்தியின் நுவரெலியா மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுசாமி இராதாகிருஷ்ணன் கேட்டுக்கொண்டார்.

நுவரெலியாவில் இன்று நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கருத்துத் தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு கூறினார்.

அவர் மேலும் தெரிவித்ததாவது:-

“அதிபர்கள் – ஆசிரியர்கள் பிரச்னையைத் தீர்ப்பதற்காக நியமிக்கப்பட்ட குழு, பிரச்னையைத் தீர்ப்பதற்காகவா அல்லது இழுத்தடிப்புச் செய்வதற்காகவா நியமிக்கப்பட்டது?

மாணவர்களின் தெய்வங்களான அதிபர்கள் ஆசிரியர்களை இந்த அரசு இன்று நடு வீதியில் போராட வைத்துள்ளது” – என்றார்.

Leave A Reply

Your email address will not be published.