அதிபர்−ஆசிரியர் சம்பள பிரச்சினை − இன்று ஆரம்பமாகும் முதற்கட்ட பேச்சு
அதிபர் மற்றும் ஆசிரியர்களின் சம்பள பிரச்சினை குறித்து ஆராய்வதற்காக நியமிக்கப்பட்ட அமைச்சரவை இணைக் குழு இன்று (12) கூடவுள்ளது.
அதிபர் − ஆசிரியர்களின் சம்பள பிரச்சினையை தீர்க்குமாறு வலியுறுத்தி, அதிபர்கள் மற்றும் ஆசிரியர்கள் கடந்த ஒரு மாத காலமாக போராட்டங்களை முன்னெடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில், குறித்த பிரச்சினை தொடர்பில் ஆராய்வதற்கு, அமைச்சரவை இணை குழுவொன்று நியமிக்கப்பட்டது.
இந்த குழுவில் அமைச்சர்களான பஷில் ராஜபக்ஸ, விமல் வீரவங்ச, பிரசன்ன ரணதுங்க, மஹிந்த அமரவீர மற்றும் டலஸ் அழகபெரும ஆகியோர் இடம்பிடித்துள்ளனர்.
இந்த குழு, முதற்கட்டமாக இன்று கூடி, பிரச்சினை குறித்து ஆராயவுள்ளதாக தெரிவிக்கப்படுகின்றது.