கொரோனா அபாயம்- மூடப்பட்டது மாநகர சபை!

நீர்கொழும்பு மாநகர சபையின் ஊழியர்கள் மற்றும் உத்தியோகத்தர்கள் 20 க்கும் மேற்பட்டவர்களுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளதன் காரணமாக மூடப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதனடிப்படையில், இன்று வியாழக்கிழமை முதல் நான்கு தினங்களுக்கு நீர்கொழும்பு மாநகர சபை மூடப்பட்டுள்ளது.
இதன் காரணமாக மாநகர சபைக்கு வந்து பொதுமக்கள் சேவையை பெற்றுக் கொள்வது தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது.
நீர்கொழும்பு பொதுசுகாதார பிரிவில் கொரோனா தொற்றாளர்களுடைய எண்ணிக்கை அதிகரித்து வருவது குறிப்பிடத்தக்கது.