எரிவாயு விலையை அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி.

லாஃப் சமையல் எரிவாயு விலையை 363 ரூபாவினால் அதிகரிப்பதற்கு நுகர்வோர் விவகார அதிகாரசபை அனுமதி வழங்கியுள்ளது.
இதன்படி , 12.5 கிலோகிராம் லாஃப் சமையல் எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 1,856 ரூபாவாக அதிகரிக்கப்பட்டுள்ளது.
அத்தோடு, 5 கிலோகிராம் சமையல் எரிவாயு சிலிண்டரின் விலையை 145 ரூபாவால் அதிகரிக்க தீர்மானிக்கப்பட்டுள்ளது. அதன்படி, குறித்த எரிவாயு சிலிண்டரின் புதிய விலை 743 ரூபாவாகும்.
மேலும் ,அறிக்கை ஒன்றை வெளியிட்டு நுகர்வோர் விவகார அதிகாரசபை இதனைத் தெரிவித்துள்ளது.