நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான சுமார் 16 ஆயுர்வேத மருந்துகள்.
கொரோனாவுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிப்பதற்கான மருந்துகளாகப் பயன்படுத்த சுமார் 16 ஆயுர்வேத மருந்துகள் இதுவரை அங்கிகரிக்கப்பட்டு பரிந்துரைகள் வழங்கப்பட்டுள்ளதாக ஆயுர்வேத ஆணையாளர் வைத்தியர் தம்மிக அபேகுணவர்தன தெரிவித்தார்.
இதன்படி ‘சுவ தரணி’ உட்பட இரண்டு மருந்துகள் ஆயுர்வேத திணைக்களத்தால் முன்னர் அங்கிகரிக்கப்பட்டதாக அவர் குறிப்பிட்டார்.
அதைத் தொடர்ந்து, 100 ஆயுர்வேத குறிப்புகள் தங்களுக்கு அனுப்பப்பட்டதாகவும் கொரோனா வைரஸுக்கு எதிரான நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கும் இத்தகைய 14 மருந்துகளுக்கு அங்கிகாரம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாகவும் கூறினார்.
அவை அனைத்தும் இயற்கையான மருந்துகள், யாரும் பக்கவிளைவுகளால் பாதிக்கப்பட மாட்டார்கள். எவரும் எந்த பயமும் சந்தேகமும் இல்லாமல் அவற்றைப் பயன்படுத்தலாம் என்று சுட்டிக்காட்டிய அவர், இந்த மருந்துகளை பிராந்திய ஆயுர்வேத அதிகாரிகளிடமிருந்து பெறலாம் என்றும் தெரிவித்தார்.
மேலும் ,கொடிய நோயை எதிர்த்துப் போராடுவதற்கு பயனுள்ளதாக இருப்பதாகக் கூறி சமூக ஊடகங்கள் மற்றும் பிற தளங்களில் பரவும் ஆயுர்வேத குறிப்புகளின் பரிசோதனைகளைத் தவிர்க்குமாறு பொது மக்களை ஆணையாளர் வலியுறுத்தியுள்ளார்.