நள்ளிரவு முதல் ரயில் ஊழியவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர்

நள்ளிரவு முதல் ரயில் ஊழியவர்கள் வேலை நிறுத்தத்தில் ஈடுபட்டுள்ளனர். ரயில் திணைக்கள ஊழியர்களைப் பாதுகாப்பதற்கான வேலைத் திட்டங்கள் இல்லை எனவும் 78 ரயில் அதிகாரிகளுக்கு கொரோனா தொற்று ஏற்பட்டு, இருவர் உயிரிழந்துள்ளனர் எனவும் தெரிவித்தே, இந்த வேலை நிறுத்தம் முன்னெடுக்கப்பட்டுள்ளதாக, ரயில் நிலைய அதிபர் சங்கத்தின் தலைவர் சுமேத சோமரத்ன தெரிவித்தார்.
குருநாகலில் நேற்று (12) இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே, அவர்
இதனைத் தெரிவித்தார். ரயில ஊழியர்களை பாதுகாப்பதற்கான வேலைத் திட்டங்கள் எவையும் இல்லை.
இதற்கு எதிர்ப்புத் தெரிவித்து, எங்களது பாதுகாப்பு உறுதி செய்து தருமாறு கோரி,
நாடளாவிய ரீதியில் நாளை (இன்று 13) 24 மணி நேரம் ரயில் ஊழியர்கள்; அனைவரும் வேலை நிறுத்தத்தில் ஈடுபடவுள்ளனர் என அவர் தெரிவித்தார்.
இதன்மூலம் தமக்குத் தேவையான பாதுகாப்பை உறுதி செய்து தருமாறு ரயில்வே
திணைக்களத்துக்கும் அரசாங்கத்துக்கும் அழுத்தம் கொடுக்கவுள்ளதாகத் தெரிவித்த அவர், அசௌகரியங்களை எதிர்நோக்கும் ரயில் பயணிகளிடம்
மன்னிப்பும் கோரினார்.
ரயில் போக்குவரத்துச் சேவை ஸ்தம்பிதம் அடைவதற்கு ரயில்வே திணைக்களமும் மற்றும் போக்குவரத்து அமைச்சும் பொறுப்புக் கூற வேண்டும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.
-இக்பால் அலி