வை. எம். எம். பேரவையின் தலைவர் நிர்வாகத் தெரிவையும் மேற்கொள்ள முனைவது பொருத்தமற்ற செயற்பாடாகும்
எமது நாட்டில் திரிவு படுத்தப்பட்ட டெல்டா வைரஸ் தீவிரமாகப் பரவி உயிரைக் காவு கொண்டு வரும் ஒரு இக்கெட்டான சூழ்ந்லையில் வை. எம். எம். பேரவையின் தலைவர் வருடாந்த மாநாட்டையும் நடப்பு வருட நிர்வாகத் தெரிவையும் மேற்கொள்ள முனைவது பொருத்தமற்ற செயற்பாடாகும். தற்போதைய நடப்பு வருட தலைவருடன் நிர்வாக உறுப்பினர்கள் உள்ளிட்ட அனைவரும் உள்ளபடி செயலாற்று மாறு நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள் கிளையினர்கள் ஒன்றிணைந்து கோரிக்கை ஒன்றை விடுத்துள்ளனர்.
அகில இலங்கை வை. எம். எம். ஏ. பேரவையின் தலைவர் தலைவர் சஹீம் எம். ரிஸ்மி அவர்களிடம் நம்பிக்கையாளர் சபையினர் முன் வைத்த வேண்டுகோளுக்கு இணங்க வருடா வருடம் நடத்தும் வை. எம். எம். ஏ பேரவையின் மாநாட்டையும் நிர்வாகத் தெரிவினையும் நடத்த திட்டமிட்டு வருகின்றனர். எனினும் இக்கால கட்டத்தைப் பொறுத்த வரையிலும் எந்த வகையிலும் வருடாந்த மாநாட்டையும் நடப்பு வருட நிர்வாகத் தெரிவையும் மேற்கொள்ள முடியாத நிலைமை காணப்படுகிறது.
யாப்பின் பிரகாரம் வை.எம்.எம். ஏ இன் வருடா வருடம் பேராளர் மாநாடு நடைபெறுவது வழக்கம். அதில் ஒவ்வொரு வருடமும் நடப்பு வருட தலைவருடன் நிர்வாக சபைத் தெரிவு இடம்பெறுவது வழக்கம் ஆகும்.
அந்தவகையில் 1950 களில் இருந்து ஒவ்வொரு வருடமும் நிர்வாகத் தெரிவுகள் இடம்பெற்று வந்துள்ளன. ஒரு தலைவர் இரண்டு வருடங்கள் இருந்தாலும் அவர் இரண்டாவது வருடத்திலும் செயற்குழுத் தெரிவில் போட்டியிட்டுத்தான் தெரிவு செய்யப்பட வேண்டும்.
தற்போதைய நடப்பு வருடத்திற்கான நிர்வாகக் குழு உறுப்பினர்களின் தெரிவு ஜுன் மாதம் 30 ஆம் திகதிக்குள் இடம்பெற்று இருக்க வேண்டும். கடந்த ஜுன் மாதம் நடத்தப்படவிருந்த பேராளர் மாநாடு கொரோனா காரணமாக விசேட கூட்டம் ஒன்றைக் கூட்டி இரண்டு மாதம் ஒத்திப்போடுவதற்கான தீர்மானம் நிறைவேற்றியுள்ளனர். அந்த அடிப்படையில் ஓகஸ்ட் 29 ஆம் திகதி நடைபெற வேண்டும்.
அதற்காக ஓகஸ்ட் மாதம் முதலாம் வாரம் ஒரு அவசர கூட்டத்தைக் கூட்டி, இலங்கை மன்றக் கல்லூரின் மண்டபத்தை முன்கூட்டியே பதிவு செய்துள்ளதோடு அந்நிகழ்வில் கலந்து கொள்வதற்காக பிரதம அதிதி யார் என்ற தீர்மானத்தையும் எடுத்துள்ளனர் . அத்துடன் ஓகஸ்ட் மாதம் நடத்த முடியாது. இன்னும் ஒரு மாதம் ஒத்திப் போடுவதற்கான தீர்மானமும் நிறைவேற்றியுள்ளர்.
வேறு அமைப்பாக இருந்தால் குறித்த நடப்பு வருட தலைவருடன் நிர்வாக உறுப்பினர்கள் இம்முறை தொடர்ந்து இருக்கலாம் என்று சொல்ல இயலும். ஆனால் வை. எம். எம். ஏ. இன் யாப்பின் பிரகாரம் அவ்வாறு செய்ய முடியாத ஒரு இறுக்கமான யாபபின் சர்த்து இருந்து கொண்டிருக்கிறது.
நிர்வாகத் தெரிவானது முறையாக வேட்பு மனுக்கல் தாக்கல் செய்து தேர்தல் நடத்தப்பட வேண்டும்.
இதற்கு அமைவாக இறுதித் தீர்மானம் ஒன்றை எடுத்து ஒன் லைன் மூலம் நடப்பு வருட நிர்வாகத் தெரிவினை நடத்த இயலுமா என துறைசாந்த தொழில் நுட்பவியலாளர்களிடம் ஆலோசனையொன்றபை; பெற்றுக் கொள்வதற்காக முயற்சிகளில் ஈடுபட்டுள்ளனர். குறிப்பாக ஒன் லைன் கம்பனியிடம் ஒப்படைக்கப்பட்டு தேர்தலை நடத்துவதற்கும் மற்றும் பின்னர் மாநாட்டை நடத்துவதற்கும் என விசேடமாக வை. எம். எம். ஏ குழுவினர்கள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். இதற்கான தீர்மானமும் நிறைவேற்றப்பட்டுள்ளது.
எவ்வாறாயினும் நாடளாவிய ரீதியில் அமைந்துள்ள வை. எம். எம். ஏ அமைப்பின் மாவட்ட அமைப்பாளர்கள், தலைவர்கள் கிளையினர்கள் ஒன்றிணைந்து நிர்வாக தெரிவு அவசியமில்லை. தற்போதுள்ள நடப்பு வருட நிர்வாக குழுவினர்களே தொடர்ந்து இருக்க வேண்டும் என நடப்பு வருட தலைவரிடம் கோரிக்கை விடுத்துள்ளதாக அவர்கள் மேலும் தெரிவிக்கின்றனர்.
இக்பால் அலி
12-08-2021