உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் குடை சாய்ந்து விபத்து.

மடூல்சீமை பொலிஸ் பிரிவிற்கு உட்பட்ட விராளிபத்தனைப் பகுதியில் உர மூட்டைகளை ஏற்றிச் சென்ற உழவு இயந்திரம் ஒன்று வீதியை விட்டு விலகி விபத்துக்குள்ளானதில் சாரதி படுகாயமடைந்து மெட்டிக்காத்தனை அரசினர் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.
குறித்த உழவு இயந்திரம் 26 உர மூட்டைகளை ஏற்றிக் கொண்டு 89 ம் இலக்க தேயிலை தோட்டத்திற்கு செல்லும் போதே இவ்விபத்து இடம்பெற்றுள்ளது.
விபத்துக்குள்ளான உழவு இயந்திரத்தில் சாரதி உட்பட மூவர் பயணித்துள்ளனர்.