நாட்டை மூடுவதற்கான எந்த முடிவையும் எடுக்கவில்லை : ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ
நாடு மூடப்படாது! பிசிஆர் பரசோதனைகளை அதிகரியுஙகள் என ஜனாதிபதி அறிவுறுத்தல்களை வழங்கியுள்ளார்.
60 வயதுக்கு மேற்பட்ட நாள்பட்ட நோய்கள் உள்ளவர்களுக்கு கோவிட் தொற்று உள்ளதா என்பதை அறிய பிசிஆர் சோதனைகளை துரிதப்படுத்துமாறு ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (12) சுகாதார அமைச்சுக்கு அறிவுறுத்தியுள்ளார்.
கொரோனா தொற்றினால் இறக்கும் பெரும்பான்மையானோர் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த நடவடிக்கைகள் மூலம் அவர்களை மரணத்திலிருந்து காப்பாற்ற முடியும் , கொவிட் நோய்த்தொற்றால் இறக்கும் பெரும்பான்மையான மக்கள் 60 வயதுக்கு மேற்பட்டவர்கள் என்பதால், இந்த நடவடிக்கைகள் அவர்களை மரணத்திலிருந்து பாதுகாக்கும் என்றார் அவர்.
நீரிழிவு, இதய நோய் மற்றும் சிறுநீரக நோய் போன்ற தொற்று அல்லாத நோய்களால் பாதிக்கப்பட்டுள்ள 60 வயதுக்கு மேற்பட்டவர்களுக்கு உடனடி பிசிஆர் சோதனைகள் நடத்தப்படும்.
நாட்டை மூடுவதற்கான எந்த முடிவையும் தான் எடுக்கவில்லை என ஜனாதிபதி, சுகாதார அமைச்சின் உயர் அதிகாரிகளிடம் தெரிவித்தார் .
ஜனாதிபதி மற்றும் சுகாதார அதிகாரிகளுக்கு இடையில் நேற்று (12) இடம்பெற்ற கலந்துரையாடலின் போதே இந்த அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டன.
இந்த திட்டத்தை செயல்படுத்த உள்ளூர் சுகாதார அதிகாரிகளுக்கு சுகாதார அமைச்சகம் விரைவில் சுற்றறிக்கை ஒன்றை வெளியிட உள்ளது.