தமிழன் பத்திரிகை ஆசிரியர் சிவராஜை கடத்த முயற்சி
திலித் ஜெயவீர லிபர்ட்டி பப்ளிஷர்ஸ் ‘தமிழன் ‘ செய்தித்தாளின் ஆசிரியர் சிவராஜை கடத்த முயற்சி மேற்கொள்ளப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது. இந்த சம்பவம் நேற்று நள்ளிரவு நடந்துள்ளதாக அறிய வருகிறது.
ஆசிரியர் சிவராஜ் , கல்கீசையில் உள்ள ஒரு அடுக்குமாடி குடியிருப்பில் வசித்து வருகிறார். நேற்றிரவு ITN இல் நடந்த ஒரு அரசியல் நிகழ்ச்சியில் பங்கேற்ற பின் இன்று அதிகாலை 1.00 மணியளவில் வீடு திரும்பியுள்ளார்.
அதன் சற்று நேரத்துக்கு பின் , சிஐடியிலிருந்து வந்ததாகக் கூறி அதிகாலை 2.30 மணியளவில் ஒரு குழு அடுக்குமாடி குடியிருப்புக்குள் நுழைய முயன்றுள்ள போதிலும் , அவர்களது நடத்தையில் ஏற்பட்ட சந்தேகத்தையடுத்து, அடுக்குமாடி குடியிருப்பு பாதுகாப்புத் தரப்பினர், வந்தோரை தடுத்து நிறுத்த முயன்றதன் காரணமாக , வந்த குழு திரும்பிச் சென்றுள்ளது.
இன்று காலை புலனாய்வு துறையினரை தொடர்பு கொண்டு இது குறித்து வினவிய போது, தமிழ் ஊடக ஆசிரியர் சிவராஜூக்கு , புலனாய்வு துறையினர்கள் தனது நிறுவனத்திலிருந்து அத்தகைய குழு எதுவும் அங்கு வரவில்லை என பதிலழித்துள்ளனர்.
சிங்கள செய்தித்தாளான ‘அருண’ மற்றும் ஆங்கில செய்தித்தாளான ‘தி சண்டே மார்னிங்’ ஆகியவை திலித் ஜெயவீரவுக்குச் சொந்தமான ‘லிபர்ட்டி பப்ளிஷர்ஸ்’ (அத தெரண) மூலம் வெளியிடப்படுகின்றன. அதே நிறுவனத்தால் தமிழன் செய்திதாளும் வெளியிடப்பட்டு வருகிறது.
இச் சம்பவம் குறித்து இன்று காலை ஆர்.சிவராஜ் , போலீஸ் இன்ஸ்பெக்டர் ஜெனரலிடம் (IGP) புகார் ஒன்றை அளித்துள்ளார்.