வல்வெட்டித்துறையில் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்ட இரு சந்தேகநபர்களுக்குக் கொரோனா!
பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட அழைத்துச் செல்லப்பட்ட சந்தேகநபர்களில் இருவர் சுகயீனம் காரணமாக உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் அவர்கள் இருவருக்கும் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.
வல்வெட்டித்துறை பொலிஸில் செய்யப்பட்ட முறைப்பாட்டின் அடிப்படையில் மோதலில் ஈடுபட்டனர் என்ற குற்றச்சாட்டில் நேற்றுமுன்தினம் 6 சந்தேகநபர்கள் கைதுசெய்யப்பட்டனர்.
அவர்கள் 6 பேரும் இன்று (13) பருத்தித்துறை நீதிவான் நீதிமன்றத்தில் முற்படுத்தப்பட அழைத்துச் செல்லப்பட்டனர்.
அவர்களில் இரண்டு பேர் நீதிமன்ற வளாகத்தில் திடீர் சுகயீனம் எனத் தெரிவித்தனர். அவர்கள் இருவரும் உடனடியாக மந்திகை ஆதார வைத்தியசாலையில் சேர்க்கப்பட்டனர்.
அவர்களுக்கு முன்னெடுக்கப்பட்ட அதிவிரைவு அன்டிஜன் பரிசோதனையில் கொரோனா நோய்த் தொற்றுள்ளமை உறுதிப்படுத்தப்பட்டது. இருவரும் உடுப்பிட்டியைச் சேர்ந்தவர்கள் என்று வைத்தியசாலையில் தெரிவிக்கப்பட்டது.