அச்சமற்ற எதிர்காலத்தை எமக்கு பெற்றுத் தாருங்கள் .! சீருடை விவகாரத்தில் சிக்குப்பட்டோர்.
சிறுபிள்ளைத்தனமான செயற்பாட்டினால் பாதிக்கப்பட்ட இளைஞர்கள் எதிர்கொள்ளும் அசௌகரியங்கள் தொடர்பாக சம்மந்தப்பட்ட தரப்புக்களுடன் கலந்துரையாடவுள்ளதாக அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தெரிவித்தார்.
யாழ். மாநகர சபையினால் அண்மையில் உருவாக்கப்பட்டு, சரச்சையை ஏற்படுத்திய காவாற்படையுடன் சம்மந்தப்பட்ட இளைஞர்கள் 5 பேரும் நேற்று மாலை அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தாவை சந்தித்து உதவி கோரியிருந்தனர்.
கட்சியின் யாழ். அலுவலகத்தில் நடைபெற்ற சந்திப்பு தொடர்பாக கருத்து தெரிவித்த அமைச்சர் தலைவர் டக்ளஸ் தேவானந்தா,
“சிறுபிள்ளை வேளாண்மை வீடு வந்து சேராது என்பது போல, யாழ். மேயர் மணிவண்ணனின் செயற்பாடுகளினால் சம்மந்தப்பட்ட ஐந்து இளைஞர்களும் தொடரச்சியாக பல்வேறு அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் எதிர்காலம் பற்றிய அச்சம் ஏற்பட்டுள்ளது.
இவ்வாறான செயற்பாடுகளின் போது, கடந்த கால அனுபவங்களையும் தற்போதைய சூழலையும் நிதானமாக ஆராய்ந்து செயற்பட வேண்டும். கண்கெட்ட பின்னர் சூரிய நமஸ்காரம் செய்வதால் பலன் இல்லை என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.
எவ்வாறாயினும், சம்மந்தப்பட்ட தரப்பினருடன் இதுதொடர்பாக கலந்துரையாடி பாதிக்கப்பட்டவர்களுக்கு கௌரவமான எதிர்காலம் உறுதிப்படுத்தப்படும்” என்று தெரிவித்தார்.