உள்ளூர் சந்தையில் நிலவும் பால்மா தட்டுப்பாடு தொடர்பாக அமைச்சரவை கவனம்.

இது தொடர்பாக விடயங்களை ஆராய்ந்து உள்ளூர் சந்தையில் பால்மா விலையை அதிகரிக்காமல், தற்போதுள்ள பால்மா இறக்குமதிக்கான வரி விகிதத்தை திருத்தம் செய்வதன் மூலமோ அல்லது வேறு பொருத்தமான நடைமுறைகளைப் பின்பற்றுவதன் மூலமோ போதியளவு பால்மாவை உள்ளூர் சந்தையில் விநியோகிப்பதை உறுதி செய்வதற்குத் தேவையான நடவடிக்கைகளை மேற்கொள்வதற்காக நிதி அமைச்சருக்கு அதிகாரம் வழங்குவதற்கு அமைச்சரவை தீர்மானித்துள்ளது.